சூரம்பாளையம் அரசு பள்ளி ஆண்டுவிழா
சூரம்பாளையம் அரசு பள்ளி ஆண்டுவிழா;
By : King 24x7 Website
Update: 2024-02-09 14:38 GMT
சூரம்பாளையம் அரசு பள்ளி ஆண்டுவிழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் நடந்தை பெரிய சூரம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டுவிழாவை ஒட்டி கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிதலைமை ஆசிரியர் இலட்சுமி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் பயிற்றுனர் செல்வராணி கலந்து கொண்டார். உதவி தலைமை ஆசிரியர் பாப்பாத்தி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.