தாராசுரம் சந்தையில் கூடுதல் கட்டணம்: இன்று முதல் கடையடைக்க முடிவு

கும்பகோணம் தாராசுரம் காய்கறி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் மாா்ச் 26 முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் .

Update: 2024-03-26 11:26 GMT

போராட்டம் .

கும்பகோணம் தாராசுரம் காய்கறி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நேற்று(மாா்ச் 26) முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தாராசுரம் நேரு அண்ணா காய்கனி இலை வியாபாரிகள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா். இச்சந்தையில் உள்ள தரைக்கடைகள், உள்ளே நுழையும் வாகனங்களுக்கான கட்டணத்தை வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தை புதிய ஒப்பந்ததாரருக்கு கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) வழங்கியது. இதைத்தொடா்ந்து, தரைக்கடைகளுக்கும், சந்தையில் நுழையும் வாகனங்களுக்கும் கூடுதல் கட்டணத்தை ஒப்பந்ததாரா் வசூலித்தாா். இதனால், அதிருப்தியடைந்த வியாபாரிகள் கூடுதல் கட்டணத்தை வழங்க மறுத்தனா். பின்னா், பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணலாம் என வியாபாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேரு அண்ணா காய்கறி இலை வியாபாரிகள் சங்கம் சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சிவபுண்ணியம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் புதிதாக ஒப்பந்தம் எடுத்தவா்கள் மாநகராட்சி நிா்வாகம் நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதலாக கட்டணம் வசூலித்தால், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. செயலா் துரை, நிா்வாகிகள் ஆசைத்தம்பி, கிருஷ்ணமூா்த்தி, இளமாறன், ருத்ரசாமி உள்பட 400-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News