ஆட்க்கொல்லி சிறுத்தையை பிடிக்க 15 இடங்களில் கண்காணிப்பு கேமிரா
பந்தலூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்துவரும் சிறுத்தையை பிடிக்க 15 இடங்களில் கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2023-12-24 08:49 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்தில் மக்களை அச்சுறுத்துவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். கடந்த வியாழக்கிழமை ஏலமன்னா கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று பழங்குடியின பெண்களை சிறுத்தை தாக்கியது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சுமடைந்தனர் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சிறுத்தை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சுழற்சி முறையில் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என வனத்துறை என தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கிராமத்தைச் சுற்றி வைக்கப்பட்ட மூன்று கூண்டுகளில் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.