ஆழ்வார்புரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மையம் திறப்பு
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்புரம் பகுதியில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கேமராக்கள் மையத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.;
Update: 2024-01-12 08:41 GMT
சிசிடிவி கேமரா கண்காணிப்பு கேமராக்கள் மையம் துவக்கம்
மதுரை மாநகர காவல்துறை சார்பாக மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்புரம் மற்றும் ஓபுளா படித்துறை ஆகிய இரண்டு இடங்களில் காவல் உதவி மையங்களையும் மற்றும் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்திலிருந்து ஆசாரி தோப்பு வரையிலான வைகை வடகரை பகுதிகளில் 28 சிசிடிவி கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார். உடன் மதுரை மாநகர வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் சினேக பிரியா,. போக்குவரத்து துணை ஆணையர் குமார், தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர் சம்பத், மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் சேதுமணிமாதவன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்