இந்திராநகர் கிராமத்தில் கணக்கெடுக்கும் பணி
கடலூர் மாவட்டம்,இந்திராநகர் கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நடைப்பெற்றது.;
Update: 2024-05-23 07:23 GMT
கணக்கெடுப்பு
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.