வாழைகிரி அருகே அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு !
வருவாய் துறை, பேரூராட்சி அதிகாரிகள், வனத்துறை, சுகாதார துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் வாழைகிரி அருகே பழங்குடியின மக்கள் வசித்து வரும் இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 10:53 GMT
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் ஒன்றான பண்ணைக்காடு பேரூராட்சி உள்ளது, இந்த பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைகிரி அருகே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, புதிதாக வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 14 குடும்பத்தினர்கள் வாழைகிரி அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள பாறைகளில் பிளாஸ்டிக் தார்பாய்கள், தகரங்கள் மூலம் வீடு அமைத்து பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு வனத்துறை மூலம் சோலார் வழங்கப்பட்டு விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.