இடையூறு மரங்களை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு !!
சேந்தமங்கலம் நெடுஞ்சாலையில் இருவழிப்பாதையாக உள்ள சாலையை, கடின புருவங்களுடன் கூடிய இரு வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட உள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-08-13 11:48 GMT
சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 2024- 25 ஆம் ஆண்டு, சுமார் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் முதல் கண்ணூர் வரை செல்லும் மாநில சாலையில் கீ.மீ. 4/8-6/0 வரை மற்றும் 7/0- 15/0 வரை தற்போது இருவழிப்பாதையாக உள்ள சாலையை, கடின புருவங்களுடன் கூடிய இரு வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட உள்ளது. சாலையை அகலப்படுத்த இடையூறாக உள்ள மரங்களை அகற்ற, மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதி பெறுவதற்கு அறிக்கை அளிக்க நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர், அவர்கள் தள ஆய்வு செய்து அகற்றப்பட வேண்டிய மரங்களை பார்வையிட்டார். தள ஆய்வின்போது வட்டாட்சியர், சேந்தமங்கலம் மற்றும் உதவிக்கோட்ட பொறியாளர்,சேந்தமங்கலம் நெடுஞ்சாலையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.