141 எம்.பிக்கள் இடைநீக்கம் - மத்திய அரசை கண்டித்து விசிக போராட்டம்
Update: 2023-12-21 08:21 GMT
ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில், 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ந்த நிர்வாகிகள், பாராளுமன்றத்தில் 141 உறுப்பினர்களை சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடி அரசு, இடைநீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கண்டித்தும், சர்வாதிகார போக்கை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர். உடனடியாக மோடி அரசு 141 உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கூறி கண்டன முழக்கங்கள் முழங்கினர்.