அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோவில் சுவாமி பவனி

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் பிரசித்தி பெற்ற மாயா கிருஷ்ணசாமி கோவில் சுவாமி பவனி நடந்தது.

Update: 2024-02-27 04:22 GMT

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் பிரசித்தி பெற்ற மாயா கிருஷ்ணசாமி கோவில் சுவாமி பவனி நடந்தது.


கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் பிரசித்தி பெற்ற மாயா கிருஷ்ணசாமி கோவில் உள்ளது.  இந்த கோவில் 99 ஆவது ரோகிணி திருவிழாவும் இந்து சமய மாநாடும் கடந்த 18ஆம் தேதி திரு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் தினத்தன்று 1008 திருவிளக்கு  பூஜை நடந்தது.      

ஒன்பதாம் திருவிழாவாகிய நேற்று காலை கணபதி ஹோமம், அபிஷேகம்,  சிறப்பு தீபாராதனை , சந்தனக் குடம் நேர்ச்சை , உச்ச பூஜை, அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு தங்க வாகனத்தில் மாயகிருஷ்ண ஸ்வாமி, அலங்கார வாகனத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி, ஸ்ரீ புவனேஸ்வரி தேவி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

   கோவிலில் இருந்து துவங்கிய சுவாமி பவனி ஆனந்த நகர், தேவி நகர், குமரபுரி,  பாஞ்சி விளை,  படந்தாலுமூடு, குழித்துறை வழியாக கோவில் வந்தடைந்தது.   பத்தாம் திருவிழாவான இன்று (27-ம் தேதி)  காலை தீபாராதனை, அபிஷேக உறியடி, திரு ஆராட்டு, திருக்கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News