திருப்போரூர் கந்தசாமி கோவிலில் சுவாமி வீதியுலா

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Update: 2024-02-25 15:23 GMT
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் சுவாமி வீதியுலா
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா, 13 நாட்கள் நடைபெறும். இதில், எட்டாம் நாள் விழாவில், உற்சவர் கந்தபெருமான், ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை செல்வார். ஆலத்துார் செல்லும் உற்சவர் ஊர்வலம் மறுநாள் திரும்பும்போது, தண்டலம், மேட்டுத்தண்டலம், பாரதி நகர், திருப்போரூர் சான்றோர் வீதி, நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை சென்றடையும். இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டு, படவட்டம்மன் கோவில் தெருவான ஆதிதிராவிடர் பகுதிக்கு வர வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உற்சவர் வீதி உலா நடக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என, டி. ஆர். ஓ. , விற்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி, கடந்த ஆண்டு கந்தசுவாமி உற்சவர் வீதி உலா, 400 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி படவட்டம்மன் கோவில் தெருவிற்கு சென்றது. அதேபோல், இந்தாண்டு மாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. இதில், நேற்று முன்தினம், எட்டாம் நாள் உற்சவத்தில், உற்சவர் கந்தபெருமான் ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை சென்றார்.
Tags:    

Similar News