சுவாமிமலை ; சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சுவாமிமலை அருகே காதல் விவகாரத்தில் சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-28 05:44 GMT

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அடுத்து மேலாத்து குறிச்சி கொள்ளிட ஆற்றின் கரையறையே ரம் மயான சாலை பகுதியில் உள்ள வயலில் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் சிறுவன் ஒருவன் இறந்து கிடந்தான். அவனது உடலை சுவாமிமலை போலீஸ் சார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கும்பகோணம் அடுத்து முப்ப கோயில் பகுதியை சேர்ந்த ராதா மகன் தாமோதரன் வயது 15 என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தாமோதரனின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாமோதரனுக்கும் அவரது நண்பர் க்கும் காதல் தொடர்பான விஷயத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏறகரம் வழி நடப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன் வயது 22 என்பவரும் மற்றும் அவரது கூட்டாளிகள் ஏரகாரம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் சத்யா காலனி சேர்ந்த கருப்பையன் மகன் பரத் வயது 19 மற்றும் சிலர் சேர்ந்து மேலத்து குறிச்சி கொள்ளிடம் ஆற்றுக் குடிநீர் உந்து நிலையம் அருகில் வயல் பகுதிக்கு சென்று அங்கு தாமோதரனை அவர்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அருவாளால் சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

அதன்படி இந்த வழக்கில் மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆழமன் குறிச்சி அர்ஜுனன் மகன் அஜய் என்கின்ற குள்ளமணி வயது 20 என்பவரை நேற்று சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News