ஆட்சியர் அறிவிப்பு பலகையில் சின்னங்கள்
திருநெல்வேலி நாடாளுமன்ற இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-03-31 06:07 GMT
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 30) இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் இறுதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளது.