அரசு பள்ளிக்கு மேசை, நாற்காலிகள்
அரசு பள்ளிக்கு மேசை, நாற்காலிகளை ஈஸ்வரன் எம்.எல்.ஏ சின்ராஜ் எம்.பி வழங்கினர்;
அரசு பள்ளிக்கு மேசை, நாற்காலிகளை ஈஸ்வரன் எம்.எல்.ஏ சின்ராஜ் எம்.பி வழங்கினர்
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் இராமபுரம் மாதிரி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 3.80 லட்சம் மதிப்பீட்டில் 40 செட் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினமான E.R.ஈஸ்வரன் தலைமை தாங்கி, பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் வழங்கினார். இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.