தமிழ் சேவா சங்கம்  சார்பில் தமிழர் திருவிழா: ஆளுநர் பங்கேற்பு

தமிழ்நாடு தமிழ் சேவா சங்கம்  சார்பில் தமிழர் திருவிழா மற்றும் கிராமப்புற பொருளாதார  மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.;

Update: 2024-01-29 14:16 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆளுநர்

தமிழ்நாடு தமிழ் சேவா சங்கம்  சார்பில் தமிழர் திருவிழா மற்றும் கிராமப்புற பொருளாதார  மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மே ம்பாட்டுத் திட்டம விழா  நாகையை அடுத்த பொரவச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கபாடி  குழு தலைவர் செல்வராஜ் கம்யூனிஸ்ட் தியாகி பழனிவேல் ஆகியோர முன்னிலை வகித்தனர் தமிழ் சேவா சங்க தன்னார்வலர் மாநில தலைவர் பிரபாகர் வரவேற்றார்.

விழாவில தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு வழங்கிய வீட்டு சாவியை பயனாளிகளுக்கு வழங்கியும்,  பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்சியில் சோகா கம்யூனிகேசன்  நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News