பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் கூடல் விழா
குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-24 12:10 GMT
தமிழ் கூடல் விழாவில் பங்கேற்ற மாணவிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக தமிழ் கூடல் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிய தலைமை ஆசிரியர் அகிலா அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக விஐடி வேந்தர் முனைவர் கோ. விஸ்வநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.