திருப்பூரில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பாண்டியன்நகரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஆறு மாதத்தில் நிறைவேற்றியது என எழிலரசன் எம் எல் ஏ பேச்சு.

Update: 2024-03-05 06:21 GMT
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை 6 மாதத்தில் நிறைவேற்றியது என திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எழிலரசன் எம்.எல்.ஏ. பேசினார். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன்நகரில் நேற்று மாலை நடந்தது. இதற்கு வடக்கு மாநகர செயலாளர், மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மாணவரணி செயலாளர், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் எழிலரசன் எம்.எல்.ஏ.பேசியதாவது:- மக்கள் விரோத பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும். பாஜக ஆட்சி கடந்த 10 ஆண்டுகாலம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் விவசாயிகள் என அனைவரையும் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திமுக அரசு தேர்தலுக்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகளை 6 மாத காலத்தில் நிறைவேற்றியது. பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். கியாஸ் சிலிண்டர்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றி பெற்று, ஒன்றிய அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இவர் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, உமா மகேஸ்வரி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ்,  பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, ராமதாஸ், மின்னல் நாகராஜ், போலார் சம்பத், முக உசேன், ஐயப்பன், முருகசாமி, குமார் மற்றும் மாநகர அமைப்பாளர்கள் முத்துக்குமார் (வடக்கு) எம் எஸ் ஆர் ராஜ்( தெற்கு)கவுன்சிலர்கள் மாலதி கேபிள் ராஜ், வேலம்மாள் காந்தி, ராதாகிருஷ்ணன், திமுக நிர்வாகி திலக்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News