தமிழ்நாடு நாள் : பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Update: 2024-07-03 03:49 GMT

பைல் படம் 

தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா  பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து . இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.

அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். கட்டுரைப் போட்டி “ஆட்சி மொழி தமிழ்” என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டிகள் குமரித் தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளிலும் நடைபெறும். மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/- , மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வீதத்தில் வழங்கப்பெறவுள்ளன. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 12.07.2024 அன்று சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News