திட்டக்குடி: தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-08 01:14 GMT
ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை போர்க்கால அடிப்படையில் வழங்க உறுதியளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆதி திராவிட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவைகளை சரி செய்து கொடுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு கூட்டணி கட்சிகள் தெரிவிக்காத பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News