தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Update: 2024-02-16 06:52 GMT

புகைப்பட கண்காட்சி 

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்பாக சிறு புகைப்படக் கண்காட்சிகளும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலப்பாடி ஊராட்சியில்  நடத்தப்பட்டன இந்த புகைப்படக் கண்காட்சியினை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News