தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியேற்று விழா

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டக் கிளையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடைப்பெற்றது.

Update: 2024-05-13 02:46 GMT

கொடியேற்ற விழா

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 41வது அமைப்பு தின விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டக் கிளையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாயிலின் முன்பு கொடியேற்று விழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையேற்று நடத்தினார்.

இந்த விழாவினை வட்ட செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார், இதில் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் கொடியினையும் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு சங்கத்தின் கொடியினையும் ஏற்றி வைத்தனர். இறுதியாக வட்ட பொருளாளர் தங்கராஜ் நன்றியுரை ஆற்றினார்.

இந்த விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசுயா தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கோபிநாத் வட்டத் துணைத் தலைவர் கணபதி தினேஷ் உள்ளிட்ட மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

Tags:    

Similar News