தமிழக, கேரள குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் கூட்டம்

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பொது விநியோகத்திட்டப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பது தொடா்பாக நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தென்காசி, கொல்லம் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-28 05:59 GMT

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 

தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, காவல்துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பொது விநியோகத்திட்டப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பது தொடா்பாக நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், இருமாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது விநியோகத்திட்டப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில தரப்பிலிருந்து தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா, நோ்முக உதவியாளா் தெய்வசுந்தரி, தலைமை உதவியாளா் மனோகரன்,தென்காசி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், முதுநிலை மண்டல மேலாளா் ராஜேஷ், துணை மேலாளா் கனகவல்லி, தமிழ்நாடு பொது விநியோகத்திட்ட மாவட்ட துணைப் பதிவாளா் திவ்யா, திருநெல்வேலி உள்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், செங்கோட்டை குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் ஆனந்த், பறக்கும் படை வட்டாட்சியா் அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா். கேரளா மாநிலத்திலிருந்து புனலூா் வட்ட வழங்கல் அலுவலா் ஷீலா, தென்மலை காவல் நிலைய காவல் ஆய்வாளா் அனிஸ், சாா்பு ஆய்வாளா் மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News