தமிழக வாழ்வாதார கிராம செழிப்பு விரிவாக்க திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக வாழ்வாதார கிராம செழிப்பு விரிவாக்க திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-27 07:35 GMT

ஆலோசனை கூட்டம் 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு அடுத்தாண்டு 2024 நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழக வாழ்வாதார கிராம செழிப்பு விரிவாக்க திட்டம் குறித்த  ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் வரவேற்றார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் பொறுப்பு அருண்குமார் முன்னிலை வகித்தார். கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா . வடிவேலன் தலைமை தாங்கினார்.

வறுமையில்லா கிராம ஊராட்சி,  நல்வாழ்வு நீரில் தன்னிறைவு பெற்றால்  சுத்தம் சுகாதாரம் பேணிகாத்தல். உள்கட்டமைப்பு வசதி பெறுதல்,சிறந்த நிர்வாக திறன் செயலாற்றுதல்,  குழந்தை மகளிர் நேய ஊராட்சி, முதியோர் நலன் காக்கும் ஊராட்சி, ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது , தமிழக மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் நான்கு திட்டப்பணிகளை கணக்கெடுத்து ஊராட்சி தலைவருடன் வழங்கப்படுதல் . உரிமைகள் சார்ந்த திட்டம் வாழ்வாதார திட்டம் பொது சொத்துக்கள் சேவைகள் வள மேம்பாட்டு திட்டம் சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கூட்டமைப்பில் உள்ள நபர்கள் தகவல்களை சேகரித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்குவார்கள். அவற்றில் ஜனவரி 26 இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று அடுத்த ஆண்டு வளர்ச்சி திட்ட பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள்.என  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட வள பயிற்றுநர் பெருமாள் ,  குமார், உமா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News