தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 04:34 GMT

ஆர்ப்பாட்டம் 

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். திமிரி ஒன்றிய செயலாளர் பிரவினா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மலர் சிறப்புரை ஆற்றினார்.

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதிம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News