அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் - ஹெச். ராஜா

மத்திய அரசின் பிரதான் மந்திரி திட்டத்தை , கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்று கொண்டு வந்துள்ளதாகவும் வெட்கமே இல்லாமல் திமுக அரசு மத்திய அரசின் திட்டத்தை பெயர் மாற்றுவதாகவும்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி புதிதாக கடன் வாங்கியதாகவும், இந்திய மாநிலங்களில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறினார்.

Update: 2024-02-21 06:23 GMT

செய்தியாளர் சந்திப்பு 

தேனி மாவட்டம் போடியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திர குமாரின் மகள் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் அதை விசாரிப்பதற்க்காக முன்னாள் பாஜக தேசிய செயலாளரும், பாஜகவின் மூத்த தலைவருமான எச்.ராஜா போடிக்கு நேரில் வந்து கட்சி நிர்வாகி வீட்டில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்‌.

அப்பொழுது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எச். ராஜா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்: அதில் மத்திய அரசின் திட்டங்கள் முழுவதையும் மாநில அரசின் திட்டங்கள் போல் திமுக அரசு பெயர் மாற்றம் செய்கிறது என்றும், குறிப்பாக மத்திம அரசின் பிரதான் மந்திரி திட்டத்தை , கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்று கொண்டு வந்துள்ளதாகவும் வெட்கமே இல்லாமல் திமுக அரசு மத்திய அரசின் திட்டத்தை பெயர் மாற்றுகிறது.

திமுக புதிதாக ஆட்சிக்கு வந்தவுடன் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி புதிதாக கடன் வாங்கியதாகவும், இந்திய மாநிலங்களில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக கூறினார். நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு மாத மாதம் ஒரு ஒரு நபருக்கும் 5 கிலோ அரிசி , 1 கிலோ பருப்பு ' யார் அப்பன் வீட்டு பணம் உதயநிதிக்கு புரிய வேண்டும் அவரது அப்பன் வீட்டு பணமா என்று கோவத்துடன் பேசினார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டம் எனவும், முற்போக்கு திட்டம் இந்த பட்ஜெட்டில் இல்லை எனவும் எச்.ராஜா குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் பிஜேபிக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது என நிருபர்கள் கேட்டதற்க்கு: நாளுக்கு நாள் பாரதிய ஜனதா கட்சியின் ஓட்டு வங்கி கூடிக் கொண்டே இருப்பதாகவும், தமிழ்நாட்டில் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் போது கண்டிப்பாக 30 சதவீததிற்க்கும் மேல் வெற்றியை நோக்கி செல்லும் என தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள அமைச்சரிடம் முதலமைச்சர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும், வெட்கம் கெட்ட ஆட்சி திமுக ஆட்சி என குற்றச்சாட்டு. அதே போன்று காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியில் உள்ள அனைத்து குடும்ப கட்சிகளுமே ஊழல்வாதிகள் எனவும், குறிப்பாக சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத், கருணாநிதி குடும்பம் ஆகிய ஊழல் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமா? உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று காட்டமாக பேசினார். இதே போன்று திமுக அரசையும் , INDIA கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பல்வேறு விஷயங்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார்.

Tags:    

Similar News