தமிழக இளைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல: முன்னாள் தலைமைச் செயலாளர்
அறிவிலும் ஆற்றலிலும் உலக இளைஞருக்கு நிகராக தமிழக இளைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
வேலூரில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய, என்ன பேசுவது எப்படி பேசுவது நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் இறையன்பு நூலை வெளியிட வேலூர் விஐடி துணை வேந்தர் ஜிவி செல்வம்,உள்பட பலர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியது, நாம் பேசுகின்ற மொழி என்பது தாயிடம் இருந்து கற்றுக் கொண்டதல்ல பல லட்சம் ஆண்டுகளாக படிப்படியாக விலங்குகளாய் இருந்து பரிணாம வளர்ச்சியை கற்று முதலில் சத்தம் போட்டு பிறகு ஓசை எழுப்பி பிறகு பாடி ஆடி பிறகு பேச தொடங்கினோம்.
அந்த பேச்சு என்பது லட்சம் ஆண்டு வரலாறுகளைக் கொண்டது என்பதை உணர்த்துவதற்காகதான் முதல் பகுதியை எழுதினேன். ஒவ்வொரு விலங்கும் ஒரு மொழியில் சங்கீத மொழியை பேசிக்கொண்டிருக்கிறது. உணவுக்காக பேசுகிறது இனவிருத்திக்காக பேசிகிறது உணர்வுக்காக பேசுகின்ற மனிதன் ஒருவன் தான்.
ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் ஒரு சொல் வாழ்க்கை உயர முடியும் ஒவ்வொரு சொல்லையும் நாம் உன்னிப்பாக உச்சரிக்க வேண்டும்,என்று அவர் பேசினார்.