பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-15 10:24 GMT

சிறப்பு பூஜை

காங்கயத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டு கள் பழமை வாய்ந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங் கட்ரமணர் ஆகிய தெய்வங்கள் உள்ளது. மேலும் சக்கரத்தாழ்வார் சாமியும் இங்கு உண்டு. இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் தெற்கு திசையை நோக்கி ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.

இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமண வயதுள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந் துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News