தமிழ் புத்தாண்டு: அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி - அம்பாள் புறப்பாடாகி அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம். சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சுவாமி தரிசனம். உலக பிரசித்தி பெற்று தீர்த்தம்,
மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் இருந்து வடமாநில பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தனர்.
அதன்பின் சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி அக்னி தீர்த்தம் கடற்கரைக்குமக்ஷ சென்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பால், தயிர், பன்னீர், இளநீர் போன்ற எட்டு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பிறகு சிறப்பு தீபாரதணை காண்பிக்கப்பட்டது, இதில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு புனித நீராடி சென்றனர்.