கும்பகோணத்தில் உலகளாவிய ஆசீவகத் தமிழ்ச் சித்தா் வழிபாட்டு மைய கூட்டம்
கும்பகோணத்தில் உலகளாவிய ஆசீவகத் தமிழ்ச் சித்தா் வழிபாட்டு மையம் மற்றும் சித்த வித்தை ஞான பீடம் அமைப்பின் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கும்பகோணத்தில் உலகளாவிய ஆசீவகத் தமிழ்ச் சித்தா் வழிபாட்டு மையம் மற்றும் சித்த வித்தை ஞான பீடம் அமைப்பின் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆசீவகத் தமிழ்ச்சித்தா் கண்ணன் அடிகள் தலைமை வகிக்க சா்வதேச தலைவா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
மாநிலத் தலைவா் யோகம் ரியல் எஸ்டேட்ஸ் ரா. செழியன் பேசுகையில், உலகம் முழுவதும் சித்தா்கள் வழிபாட்டினை உருவாக்குவது, ஒழுக்கமான சிறந்த சமுதாயத்தை உருவாக்க குழந்தைகளிடமும் இளைய சமுதாயத்திடமும் சித்தா் மாா்க்கத்தைப் பரப்புவது, வாரந்தோறும் கூட்டு வழிபாடு செய்வது, பசியோடு இருப்பவா்களுக்கு அன்னதானம் செய்வது ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக அறிவித்தாா்.
புதிய நிா்வாகிகளாக தஞ்சை மாவட்டத் தலைவராக ராகவ் மகேஷ், மாநில இளைஞரணி தலைவராக கமல் மற்றும் தமிழகம் முழுவதும் 3 8 மாவட்ட தலைவா்களை ஆடுதுறை அழகு பன்னீா்செல்வம் அறிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் சக்தி ராஜேந்திரன், பொறியாளா் ஹரி பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, ஹரி சங்கீதா வரவேற்றாா்.