கட்டபொம்மன் மணிமண்டபத்தை பார்வையிட்ட அயலகத் தமிழ் மாணவர்கள்

பண்பாட்டு கலாச்சார சுற்றுலா பயணம் மேற்கொண்ட 58 அயலகத் தமிழ் மாணவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை பார்வையிட்டனர்.

Update: 2024-01-06 04:12 GMT

பண்பாட்டு கலாச்சார சுற்றுலா பயணம் மேற்கொண்ட 58 அயலகத் தமிழ் மாணவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை பார்வையிட்டனர்.

அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம்' எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்கனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து  தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்திரவிட்டிருந்தார்.  இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில் மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்குகிறது.  தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  இப்பண்பாட்டு பயணத்தை துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஐ ஓ எப் எஸ்  முன்னிலை வகித்தார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா. பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்தனர். இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர். சிவகங்கை, தூத்துகுடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி. செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்கிறார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல்களும். பயிற்சிவகுப்புகளும் இடம்பெற்று வருகிறது.

மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று பகிர்ந்துகொள்வார்கள். மேலும் தங்களின் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாச்சார் தூதுவர்களாகவும் செயல்பட ஊக்கம்பெறுவார்கள். அதன்படி இன்று (04.01.2024) அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் வேர்களைத் தேடி என்கிற பண்பாட்டு கலாச்சார சுற்றுலா திட்டத்தின் கீழ், பண்பாட்டு கலாச்சார சுற்றுலா பயணம் மேற்கொண்ட 58 அயலகத் தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டின் தொன்மை, பெருமை மற்றும் கலாச்சாரத்தினை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில்  அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தினை பார்வையிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம்செறிந்த வாழ்க்கை வரலாற்றினைக் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், தனித்துணை ஆட்சியர் (அயலகத் தமிழர் நல ஆணையரகம், சென்னை) செண்பகவள்ளி, தனித்துணை ஆட்சியர் (அகதிகள் நலன்) கண்ணா கருப்பையா, கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன், கண்காணிப்பாளர் (அயலகத் தமிழர் நல ஆணையரகம், சென்னை) கனிமொழி, தனி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News