தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நாளை முதல் அந்த சங்கத்தின் கீழ் இயங்கும் பட்டாசு ஆலைகளில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2024-05-23 17:12 GMT

பட்டாசு உற்பத்தியாளர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றனர். இதில் வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசியை சுற்றி உள்ள பட்டாசு ஆலைகள் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்றனர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பச்சை உப்பு பயன்படுத்தி பட்டாசு தயாரித்தல்,

மற்றும் சரவெடிகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் மாவட்ட நிர்வாகம் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பச்சை உப்பை கண்டுகொள்ளாமல் சரவெடி செய்யும் சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி தமிழன் பட்டாசு மற்றும் கேப்படி உற்பத்தி அவர்கள் சங்கத்தினர்,

  நாளை 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அந்த சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News