தமிழியக்கம் தமிழன்னையின் கோடை விழா!
ஊட்டியில் தமிழியக்கம் சார்பாக கோடை விழா ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது.;
Update: 2024-06-05 13:59 GMT
ஊட்டியில் தமிழியக்கம் சார்பாக கோடை விழா ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்கு தமிழியக்கம் பொருளாளர் இலக்கியகுமார் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் வசந்தகுமாரி தலைமைத் தாங்கினார். பொதுநூலகத்துறை நூலக அலுவலர் வசந்த மல்லிகா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியரங்கம், இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம் ஆகியவை அரங்கேறியது. இந்நிகழ்வில் பங்கேற்பார்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விருது வழங்கி கௌரவித்தனர். தமிழியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமணா சுரேஷ் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.