குறுவை தொகுப்பு திட்ட அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழக அரசு இந்த வருடத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Update: 2024-06-15 07:50 GMT

சீனிவாசன் 

குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிப்பு குறித்து முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் கூறியதாவது,, தமிழக அரசு இந்த வருடத்திற்கான குருவை தொகுப்பு திட்டத்தை தேர்தல் காரணமாக தாமதமாக நேற்று அறிவித்துள்ளது . வரவேற்கிறோம். அதற்கான தொகை 78.67 கோடி ரூபாய் என்று அறிவித்துள்ளது. ஆனால் அந்த அறிவிப்பில் உரங்கள் இடம் பெறவில்லை. அதற்குரிய காரணங்கள் தெரியவில்லை ஆனால் நடவு இயந்திரத்திற்காக ரூபாய் 4000 நான்காயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அரசு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

விதை மற்றும் ஜிப்சம் போன்ற பொருள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் ஏற்கனவே விதை விட்டு நடவுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் விதைக்கு எவ்வாறு பணம் வழங்க இருக்கிறது. இதை கண் துடைப்பு வேலை. விவசாயிகளுக்கு உரம் தான் முக்கியமாக ஒரு இடுபொருளாக இருக்கிறது. உரங்கள் அதிக விலையாக இருக்கிறது . அதன் காரணமாக தான் சென்ற ஆட்சியில் இந்த குருவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. முற்றிலுமாக அது மாற்றப்பட்டுள்ளது மற்றும் இந்தத் தொகையானது டெல்டா மாவட்டங்கள் ஆறு மாவட்டங்களுக்கு உட்பட்டது இந்த வருடம் கோடை மழை அதிக அளவில் பெய்ததாலும் சாதகமாக இருந்ததாலும் நேரடி நெல் விதைப்பு மற்றும் குருவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை சரிவர கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் மேற்படி தொகையை மறுபடி மறு பரிசீலனை செய்து அதிகமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என தெரிவதார்.

Tags:    

Similar News