விருதுநகர் மாவட்டத்தில் 1கோடி மரங்கள் நட இலக்கு

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் சார்பில் 1 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியார் தெரிவித்துள்ளது.

Update: 2024-02-29 17:34 GMT
மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் சார்பில் பசுமைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் மரங்கள் நடுவதற்கு வாய்ப்புகள் உள்ள இடங்களில் வனத்துறை, விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் 1 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோடி திட்டப் பணிகள் செய்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் நடுவதற்கு ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள்,

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் விவசாயம் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் கூட்டம் நடத்தி வழிமுறைகள் வழங்கப்படும் எனவும், துறை சார்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News