வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணி...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சி ருமான கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-11 05:49 GMT

வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சி ருமான கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,665 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் வகையில் 3,992 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,996 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,162 வாக்காளர் சரிபார்ப்பு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், ஏப்ரல் 10 ஆம் தேதி பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் துறையூர் நகராட்சி அலுவலகத்திலும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்நிகழ்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெரம்பலூர் கோகுல் , துறையூர் குணசேகரன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சிவா, பாரதிவளவன், வட்டாட்சியர்கள் பெரம்பலூர் சரவணன், துறையூர் வனஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News