காட்டெருமை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு !

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு மாடு தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூபாய் 50,000 வழங்கிய வனச்சரக அலுவலர் மணிகண்டன்.

Update: 2024-04-05 09:36 GMT

பலி

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் காட்டு மாடு தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு.வால்பாறை சுற்றுவட்டார வனப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளை தேடி அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு மாடுகள் அங்கு பணி செய்து கொண்டிருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களை துரத்தியுள்ளது இதில் ராஜிவ் 48 வயது என்பவரை காட்டு மாடு பலமாக முட்டி தூக்கி வீசி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராஜீவை சக பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சகர் மணிகண்டன் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளி ராஜிவ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதல் கட்ட நிவாரணத் தொகையாக ரூபாய் 50,000 வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ள காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்டி மீண்டும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க ரோந்து பணியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News