கருப்பு பேட்ச் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,;

Update: 2024-02-05 06:49 GMT

ஆர்ப்பாட்டம் 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 90 சதவீதம் ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243 ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.   90 சதவீதம் ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243 - யை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது இந்த நிலையில் ஒரு சில அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News