மசாஜ் சிகிச்சை மையத்தில் பெண்ணை ரகசிய வீடியோ எடுத்த வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலில் ஆயுர்வேதா மற்றும் சித்தா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-02 16:06 GMT

மசாஜ் சிகிச்சை மையத்தில் பெண்ணை ரகசிய வீடியோ எடுத்த வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலில் ஆயுர்வேதா மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அங்கு சென்றார். அப்போது அவருக்கு பெண் பணியாளர் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார். இந்த நிலையில் அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் கேமரா மூலமாக வீடியோ பதிவு செய்ததை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் குறித்த அந்த பெண் அவரது உறவினர்களுக்கும், வடசேரி போலீசர்களும் தகவல் தெரிவித்தார். இதை அடுத்து அங்கு போலீசார் மற்றும் அவர் உறவினர்கள் வந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள வாலிபர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் யாரும் வீடியோ எடுக்கவில்லை என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு வாலிபரின் செல்ஃபோன் ஒன்றில் பெண்ணுக்கு மசாஜ் சிகிச்சை அளித்த வீடியோ காட்சி இருந்தது. இதை கண்ட அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை போலீசார் முன்னிலையில் தாக்கினார்கள். தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மசாஜ் சென்டரில் தங்கி வேலை பார்ப்பதாகவும் கூறினார். இதையடுத்தது அவரது இரண்டு செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரை விசாரணக்காக வடசேரி போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News