விற்பனைக்கு மதுபாட்டில் வாங்கிய வாலிபர் கைது

சேலம் மாவட்டம், கொண்டயம் பள்ளி டாஸ்மாக் கடை விற்பனைக்காக 150 மதுபாட்டிகல் வாங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-18 09:33 GMT

கைது 

தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தம மம்பட்டி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி, செந் தாரப்பட்டி ஆகிய பகுதிக ளில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அறி விக்கப்பட்டது. மேலும், தனி நபர்களுக்கு 5 பாட் டில்களுக்கு மேல் கொடுக் கக் கூடாது என டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம், திருச்சி மாவட்டம், தாதர்பேட்டை பகுதியை சேர்ந்த சுகுமார்(35) என்பவர், கொண்டயம் பள்ளி டாஸ்மாக் கடை யில் 150 பாட்டில்களை மொத்தமாக வாங்கியுள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு வந்த தம்மம்பட்டி போலீசார், சுகுமாரை கைது செய்ததுடன், 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மது பாட்டில்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து சுகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News