லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது!
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-25 05:30 GMT
கைது
ஆலங்குடி போலீசார் அப்ப குதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பரப்பன்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினீத்குமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன்கள், ரூ.550 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.