சேலம் கன்னங்குறிச்சியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது !

சேலம் பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 24). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு வழிப்பறி வழக்கில் கன்னங்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-15 04:32 GMT

கைது

சேலம் பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 24). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு வழிப்பறி வழக்கில் கன்னங்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே குற்ற சம்பவத்தில் ஈடுபடமாட்டேன் என்று சேலம் உதவி கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவரிடம் அதிகாரிகள் கையெழுத்து வாங்கினர். ஆனால் நன்னடத்தை விதியை மீறி கோகுல்நாத் ெதாடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார்.

Advertisement

ஏற்கனவே கோகுல்நாத் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே, தொடர்ந்து குற்ற சம்பவத்தில் கோகுல்நாத் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதனை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று கோகுல்நாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான சார்வு நகலை மத்திய சிறையில் உள்ள கோகுல்நாத்திடம் கன்னங்குறிச்சி போலீசார் வழங்கினர்.

Tags:    

Similar News