போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 14:37 GMT
தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர்
தூத்துக்குடியில் கடந்த 2021ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி சக்தி நகரை சே மணிகண்டன் (26) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம் குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.