சங்ககிரி அருகே லாரி மோதி வாலிபர் பலி

சங்ககிரி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார்.

Update: 2024-01-14 10:09 GMT

விபத்தில் சிக்கிய லாரி

சேலம் மேற்கு வட்டம், மல்லமூப்பம்பட்டி, சித்தனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் வைத்தியநாதன் (25). பவானியிலிருந்து சேலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக முன்னாள் எம்.சாண்ட் மண் பாரம் ஏற்றிக் சென்ற லாரியின் பின்புறத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் என் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News