வாலிபருக்கு கத்திக்குத்து: இருவர் கைது

நாகர்கோவில் அருகே வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-03 11:19 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் இடலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் மகன் ஆகாஷ் (20 ) இவர நண்பர் சஜித் (20 ) சம்பவ தினம் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு நடந்த சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6பேர் கொண்ட கும்பல் ஆகாஷ், சஜித் இருவரை வழிமறித்து தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சஜித்தை குத்தினார்கள். அப்போது ஆகாஷ் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.       இதில் ஆகாஷ் உயிரிழந்தார். சஜித் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக இடலாக்குடி பகுதியை சேர்ந்த ஷேக் சையது அலி என்ற பைசல் (28), சுசீந்திரம் பகுதி  தில்லைநம்பி (25) இருவரை போலீசார் கைது செய்தனர்.      இந்த கொலை வழக்கில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இடலாக்குடி சேர்ந்த ராகுல் (23) என்பவரை போலீசார் கைது செய்து நேற்று  கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்று இடலாக்குடி சாஸ்திரி நகரை சேர்ந்த ஆசிப் என்ற முகமது ஆசிப் (25) என்பவர் நாகர்கோவில் கோர்ட்டில் சரணடைந்தார். சரணடைந்த வரையும் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News