வாலிபர் தற்கொலை!

தாயார் திட்டியதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-02-05 04:58 GMT
வாலிபர் தற்கொலை!

வாலிபர் தற்கொலை

  • whatsapp icon
திருமயம்: அரிமளம் அருகே உள்ள ஆணைவாரியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (25). காரைக்குடியில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாக வில்லை. சம்பவத்தன்று தாயார் காத்தாயி திட்டியதால் மனமுடைந்த பேச்சிமுத்து விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News