ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்பு
ஆற்காடு அருகே வேப்பூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.;
Update: 2024-06-18 00:58 GMT
ஆற்காடு அருகே வேப்பூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் ஷரீப் (32). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.இந்தநிலையில் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தம்பி மொய்தீன் அண்ணனை தேடி ஏரிக்கு சென்றுள்ளார்.
அப்போது முபாரக் ஷரிப் ஏரியில் பிணமாக கிடந்துள்ளார்.இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.