வயலில் வாலிபர் சடலம் - போலீசார் விசாரணை

சுவாமிமலை அருகே விவசாய வயலில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-25 08:33 GMT

 கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேலாத்துக்குறிச்சி மயானக்கரை சாலையில் ரமேஷ் என்பவருடைய குத்தகை வயலில் 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை காலையில் நடை பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில் நீலத்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் இளவரசனுக்கு பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் இளவரசன் நேரில் வந்து பார்த்து சுவாமிமலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

Advertisement

தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ் ராவத், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன், சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு சிவ செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் படுகொலை நடைபெற்ற வயலுக்கு சென்று பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வயல்வெளியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட வாலிபர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News