தேய்பிறை அஷ்டமி ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியை ஒட்டி ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-02 14:50 GMT
சிறப்பு அலங்காரம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு யாக பூஜை வழிபாடு நடந்தது. பக்தர்கள் எலுமிச்சை, பூசணி, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜையில் சேலம், ஈரோடு, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.