தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ஆறகளூரில் உள்ள காமநாத ஈஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்ட பைரவர்கள் உள்ளனர். இதில் காலபைரவர் சாமிக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.அதன்படி நேற்று மாலையில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பக்தர்கள் எலுமிச்சம்பழம்மாலை, பல்வேறு மலர்களால் மாலை அணிவித்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை ஆகிய பொருட்களில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு பூஜையில், சேலம், கோவை, ஈரோடு, பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலத்தின் இருந்து காலபைரவரை வழிபட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.