கோவில் நிலம் ஏலம் - கிராம மக்கள் எதிர்ப்பு

சூளகிரி அருகே வெங்கடரமணா சுவாமி கோவில் நிலத்தினை ஏலம் எடுப்பவர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி ஏலம் விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-06-21 06:08 GMT

எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பெரிய சப்படி கிராமத்தில் பழமையான வெங்கடரமணா சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர்கள் நிலம் நேற்று  ஏலம் விடப்படுவதாக அறிவித்து, கோவிலில் ஏலம் விட முயன்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதுக்குறித்து கிராம மக்கள் கூறுகையில்: கோவில் நிலத்தினை ஏலம் எடுப்பவர்கள் அந்த நிலத்தில் மண் திருடுவது, கல்குவாரி கழிவுகள் வருவதாக கிரஷர்களை மிரட்டும் சம்பவங்கள் நடந்து வருவதால் கோவில் நிலத்தினை யாரும் ஏலம் எடுக்கக்கூடாது நிலம் தரிசாக கால்நடைகள் மேய்ச்சலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென கூறி கிராம மக்கள் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏலம் விட வேண்டாமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.. இந்த நிலையில் ஏலம் விட கோவிலிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News