திருவோணம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே கோவிலில் திருடிய நபர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-05 08:01 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே கோவில் பூட்டு உடைக்கப்பட்டு சாமி நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே நம்பிவயல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நகை திருட்டு போன சம்பவம் இப்பகுதியில், பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News